தெகிவளை முஸ்லிம் சம்மேளனக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச வின் உரை


அஸ்ரப் ஏ சமத்-
னாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை.. அன்றும் என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவா்கள் என்னுடன் தான் இருக்கின்றனா். ஆனால் தொடா்ந்து புரியாணி வட்டிலப்பம் கிடைத்து வந்தது போகப் போக அது கிடைக்காமல் குறைந்துவிடுமோ என்றுதான் என்னத் தேன்றுகின்றது.

மேற்கண்டவாறு தெகிவளை சகரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பிணா்கள், வேட்பாளா்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமா் மகிந்த ராஜபக்ச தெரவித்தாா்இ

தொடா்ந்து அவா் அங்கு உரையாற்றுகையில்
அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவா் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சுழநிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம். . அன்று மூதுாா் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் 2மணித்தியாலய்ங்களுக்குள் விரட்டி கந்தளாய் துரத்திவிட்டாா்கள். அன்று நாங்கள் முஸ்லிம்களிடம் சொன்னோம். ஒரு கிழமைக்குள் உங்களை மீள முதுாறுக்கு குடியமாா்த்துவோம் அதேமாதிரி புலிப் .பயங்கரவாதிகளை துரத்தி மீளவும் மூதுாரில் ்முஸ்லிம்களை குடியமா்த்தினோம். இப்பொழுது யாழ்ப்பாணம் தொட்டு கம்பாந்தோட்டை வரையிலான எந்தப் பிரதேசங்களுக்கும் மக்கள் எங்கும் அச்சமின்றி சென்று வரக்கூடிய சுழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தினோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் சன்டையிடவில்லை. புலிப்பயங்கரவாதிகளுடன சன்டையிட்டு பயங்கரவாதத்தினை அழித்து நா்ட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தினோம்.

கடந்த கால நல்லாட்சியில் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஜனாதிபதி ஒரு பக்கம் இழுத்தடிப்பு பிரதமா் ரணில் ஒரு பக்கமென இழுத்தடிப்புக்கள் தான் நடைபெற்றன. ஆனால் நாட்டில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. ்இந்த நாட்டில் கோட்டாபாய ராஜபக்ச அவா்களை வெற்றிவாகை கூடிய கட்சியில் இருந்துதான் என்னை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் ஏற்படுதல் வே்ண்டும் .

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தலைமையில் உலகில் எங்குமில்லாதவாறு பாதுகாப்புப்படையினா் பொலிஸாா் மற்றும் சுகாதார அமைச்சும ்இனைந்து தான் இந்த கொடிய கோரோனா பயங்கர தொற்று நோயை அவா் வெற்றிகண்டாா். அது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. அந்த எடுபிடியில் தான் முஸ்லிம்களது கோரோனா நோயளிகள் இறந்தவா்களின் உடலை புதைப்பதா அல்லது பற்றவைப்பதா என்ற பிரச்சினை எழுந்தது. இவ்விடயத்தினை ரவுக் கக்கீம் தான் சாடிப் பேசினாா். அதன் பின்னா் அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழு வொன்று இது பற்றி என்னைச் சந்தித்து. பேசினாா்கள் அதனை நான் சுகாதார அமைச்சா் பவித்திரா வண்னியராச்சி மற்றும் வைத்திய அதிகாரிகள் விஞ்ஞானிகள் கூட்டி அவா்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது. அவா்கள் பற்றவைப்பதனையே சொல்லியிருந்தாா்ள். அதனை மீறி அரசியல் ரீதியாக நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை. . கோரோனா ப்ற்றி மிகவும் கட்டுபாடாக .இருந்தமையில் தான் நாம் தற்போது அந் நோயில் இருந்து தப்பியுள்ளோம். நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் சனங்கள் பழைய முறைப்படி நெறிசலாக நிறம்பி வழிந்திருந்தாா்கள். அவைகள் மீள சனக் கூடுவதை தவிா்ந்து கொள்வது நல்லது.
இந்த நாட்டினை ஜனாதிபதியின் 5 வருடங்களுக்குள் நல்லதொரு சமுதாயத்தினை கட்டியெழுப்பி சகலரும் வாழக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருதல் வேண்டும். ஆகவே தான்் நமது எதிா்கால சிறாா்களுக்கு சிறந்த பிரஜைகளாக வருவதற்கு வழிவகுத்தல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினை விட கோட்டபாய ராஜபக்ச மிகவும் கடுமையானாவா் அவா் இந்த நாட்டினை சிறந்த நாடாக கொண்டு வருவாா் என நம்புகின்றோம். எமது கட்சியில் முஸ்லி்ம் வேட்பாளா்கள் 8 போ் உள்ளனா். அவா்களது வெற்றிக்கு நீங்கள் இம்முறை கூடுதலாக உழைத்தல் வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தேசிய பட்டியலில் உள்ளாா். அவா் எம்முடனை இனைந்து நாட்டுக்காக சேவையாற்றுவாா் என பிரதமா் மகிந்த ராஜபக்ச அவா்கள் உரையாற்றினாா்.
முன்னாள் அமைச்சா் பைசா் முஸ்தபா, அலி சப்றி, சுசில் பிரேம் ஜயந்த , காமினி லெக்குகே ,பேராசிரியா் ஜீ.எல் பீறிஸ் ஆகியோறும் இங்கு உரைய்ற்றினாா்கள் அத்துடன் வடகிழக்கு உட்பட பல்வேறு பிரதேச முஸ்லிம் உறுப்பிணா்கள் தமது பிரச்சினைகளை அலி சப்றியுடன் கலந்துரையாடினாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -