மாமியாரின் காணியில் உள்ள கிடங்கை மூட நிதி ஒதுக்கிய கிராம சேவையாளர் சர்ச்சையில்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் கிராம சேவையாளின் தனது மாமியாரின் வீட்டுக்காணியில் போரின் போது விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட பாரிய கிடங்கை மூட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த கிடங்கினை மூடுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு இரண்டு இலட்சத்தி 63 ஆயிரம் ரூபா நீதி ஒதுக்கீட்டிற்கான அனுமதியினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது விடயம் குறித்து தெரியவருகையில்..


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால போரின் போது அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்கதல்களால் ஏற்பட்ட பாரிய கிடங்குகள் மற்றும் மண் அரண்கள் மக்கள் வாழ் இடங்களில் காணப்படுகின்றன.

2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலர் இவ்வாறானவற்றை சீர்செய்து மூடி அகற்றி விவசாய நடவடிக்கை மற்றும் அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

மாணிக்கபுரம், மூங்கிலாறு போன்ற பகுதிகளில் போரின்போது கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்கள் தற்போதும் மக்களின் காணிகளில் காண்படுகின்றன

மக்கள் பல அரச அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் அவை அகற்ற முடியாத நிலையில் வாழ்கின்றார்கள்

அண்மையில் மூங்கிலாற்று பகுதியில் வீட்டு உரிமையாளரின் செலவில் அகற்றப்பட்ட மண் அரண் ஒன்றிற்குள் கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளன.

காணிகளில் விவசாயம் செய்யவோ அல்லது பயன்தரு மரக்கன்றுகளை நாட்டவோ முடியாத நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.

கோம்பாவில் கிராமத்தில் மாத்திரம் நான்கு பேரின் காணிகளில் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணைத்தாக்குதல்களால் ஏற்பட்ட பாரிய கிடங்குகள் காணப்படுகின்றன.

இவற்றை அகற்றமுடியாத பொருளாதார நிலையில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்லையில் கோம்பாவில் கிராம சேவையாளரின் மாமியாரின் காணியில் தென்னந்தோட்டத்திற்கு மத்தியில் உள்ள பகுதியில் விமானத்தாக்குதலினால் ஏற்பட்ட பாரிய கிடங்கு ஒன்று காணப்படுகின்றது.

அதனை மூடுவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் மதிப்பீட்டு நிதிக்கோரிக்கையினை கிராம சேவையாளர் தனிப்பட்ட முறையில் விடுத்துள்ளார்.

இது குறித்து கோம்பாவில் கிராமத்தில் உள்ள கர்ணன் குடியிருப்பு, கோம்பாவில், ஆத்துப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கம் என மூன்று கிராம அபிவிருத்தி சங்கங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான கிராம அபிவிருத்தி சங்கம் எவற்றுக்கும் அறிவிக்கப்படாமல் வசதியாக வாழ்பவர்களின் வீட்டில் பிரச்சனை என்றவுடன் இவ்வாறு ஒதுக்கீடு செய்கின்றார்கள் என கிராம அபிவிருத்தி சங்கங்களக் குற்றம் சாட்டியள்ளன.

எந்த அறிவித்தலும் இல்லாமல் கர்ணன் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் இந்த ஒப்பந்தத்தினை எடுத்து செய்யுமாறு கேட்டுள்ளார்கள்.

அதற்கமைய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். கோம்பாவில் கிராம சேவையாளர் இந்த வேலைக்கான ஒப்பந்தத்தினை கர்ணன் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக கையெழுத்து வைத்துவிட்டு தாங்களே அதனை மூடுவதாகவும் அதற்கான நிதியினை கிராம சேவையாளரிடம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

என்றும் அதற்கு மறுப்பு தெரிவித்த கர்ணன் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் அந்த ஒப்பந்தத்தினை செய்து முடிக்கும் பணியில் ஈடுபட்டள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது இதற்கான மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் கிபிர் அடிச்ச கிடங்கினை உடனடியாக மூட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

கர்ணன் குடியிருப்பு பகுதியில் இன்னும் நான்கு காணிகளில் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணைத்தாக்குதலால் ஏற்பட்ட பாரிய கிடங்குகள் மக்கள் வாழ் இடங்களில் காணப்படுகின்றன என்றும் இதனால் மேட்டு நில பயிர்செய்யும் இந்த கிராம மக்கள் கிடங்குகள் காணப்படும் பகுதிகளில் பயிர் செய்கை பண்ணமுடியாத நிலை தொடர்ந்துள்ளன.

அவ்வாறிருக்க கோம்பாவில் கிராம சேவையாளரின் மாமியாரின் தென்னந்தோட்ட காணியில் கிபிர் கிடங்கினை மூட மதிப்பீடு செய்த அனுப்பி அதற்கான அனுமதியினை பெற்றுள்ளமை கிராம சேவையாளர்களின் பக்கசார்பான நடவடிக்கையினை எடுத்து காட்டுவதாக கிராம அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இருந்தும் கிராம சேவையாளரின் மாமியாரின் வீட்டின் தென்னந்தோட்டத்தில் காணப்படும் கிபிர் கிடங்கினை மூடிவிட்டு மீதி பணம் இருந்தால் ஏனைய மக்களின் வீடுகளில் காணப்படும் இவ்வாறான கிடங்குகளை மூடுமாறு ஒப்பந்தம் செய்த கிராமஅமைப்பினருக்கு பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -