தேசிய காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று (28) மாலை முன்னாள் பிரதேச செயலாளரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளரும், திகாமடுல்ல பாராளுமன்ற வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் தேசிய காங்கிரசின் வேட்பாளர்களான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், சட்டத்தரணி கே.எல்.சமீம், தொழிலதிபர் டீ. ரவூப், விரிவுரையாளர் றிசாத் செரிப், சிரேஷ்ட அரசியல் பிரமுகர் எஸ்.எல்.எம். பலீல் பீ. ஏ, சட்டத்தரணி மர்சூம் மௌலானா உட்பட தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.