கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன வழிகாட்டலில் விசேட அதிரடிப் படையினர்களின் சுற்றிவலைப்பின் போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி குளத்துமடு என்னும் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஈயக் குண்டுகளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினரால் கைப்பற்றப்பட்ட கட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஈயக் குண்டுகள் மற்றும் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப் படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -