திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களை பார்க்கின்ற போது சுயேட்சை குழு போன்றுள்ளது இப்பட்டியலில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குகிறவரும் இருக்கிறார்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியும் வருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் (09) இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு அவர் கருத்துரைக்கையில்
ஐக்கிய தேசிய கட்சி மஹிந்தவுடன் சேர்ந்து டீல் பேசியுள்ளது எதிர் வரும் காலங்களில் மக்கள் சக்தி தலைமையின் கீழ் சஜீத் பிரேமதாச மூலமாக மக்கள் ஆணையைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்றி சிறந்த அணியாகச் செயற்படுவோம்.
தேர்தல் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது இருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகள் எமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் நடைபெறும் தினம் ஒரு நாளிலும், வாக்கெண்ணும் தினம் ஒரு நாளிலும், விருப்பு வாக்கெண்ணும் தினம் ஒரு நாளிலும், தேர்தல் முடிவுகள் ஒரு நாளிலுமாக காணப்படுகிறது
இடைப்பட்ட காலங்களில் வாக்குப் பெட்டிகளை அடை காக்க வேண்டியுள்ளது ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டும்.
கொவிட்19 தாக்கம் இருக்கின்ற போதும் தேர்தல் கண்காணிப்பாளர்களை ஜனநாயக முறையில் வெளிநாட்டவர்களையும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையகம் ஏற்படுத்த வேண்டும் .தற்காலத்தில் 3/2 பெரும்பான்மையை அரசாங்கம் எப்படியாவது எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் சிறுபான்மையின மக்களின் வாக்குகளின்றியே பெரும்பான்மை ஆசனங்களை பெறுவோம் எனவும் ஒரு வகையான பேச்சும் காணப்படுகிறது.
கிழக்கில் சிறுபான்மை இனத்தை உள்ளடக்காத வகையில் பிக்குகளின் தலைமையில் தொல்பொருள் செயலணி இரானுவத்தினரின் தலைமையிலும் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு வகை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.