எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியைச் நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் இன்று(29) உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரம் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் 53 வயதுடைய ஒருவரே சவூதியில் உயிரிழந்துள்ளார்.
சவூதி அரேபியாவில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாகவும்,சடலத்தினை நாட்டுக்கு கொண்டுவருவதா அல்லது சவூதியில் நல்லடக்கம் மேற்கொள்வதா போன்ற நடவடிக்கைகளை தூதரகம் ஊடாக உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.