யார் இந்த ஹரீஸ்? இதில் எது துரோகம்??


இம்தியாஸ்-

சில விடயங்கள் பொது வெளிகளில் பேசக் கூடாது என்பதனால் பலரும் பொறுமையாக இருக்கின்றனர். எல்லோருக்கும் நடந்த, நடந்து கொண்டிருப்பவைகளை பந்தி பந்தியாக எழுத தெரியும். சிலரின் சுயநல அரசியல் தேவைகளுக்காக ஹரீஸை சுய நல அரசியலுக்காக துரோகியாக காட்ட நினைக்க வேண்டாம். அந்த துரோகங்கள் எப்போது யாருக்காக என்று அறியும் வரை.
மூதூரில் எமது சகோதரர்களுக்காக ரணிலோடு சண்டையிட்டது துரோகமா?
நமக்காக பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தது துரோகமா?
கல்முனையை தன்னம்தனியாய் மீட்டது துரோகமா? (சிலர் சுயநல அரசியல் தேவைகளுக்காக கூட கல்முனை விடயத்தில் பின்வாங்கியது ஞாபகமா?) இப்போது மயில் குஞ்சுகளாக.
எமது முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி சாய்ந்தமருதுற்கும் கல்முனைற்கும் பாதிப்பில்லாதவாறு நடுநிலையோடு செயற்பட்டது துரோகமா?
அம்பாரையில் தர்க்கம் செய்தது துரோகமா?
இரு தலைமைகளையும் ஒன்றிணைத்தது துரோகமா?
அனைத்து மக்களுடனும் பெருமையில்லாமல் சாதரண எளிமையாக நேர்மையாக பழகுவது பிழையா துரோகமா?
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டம் கல்முனை தொகுதியில் SLMC யை ஆட்சி அமைக்க இரவு பகல் கண் விழிகளை மூடாது போராடி ஆட்சி அமைத்தது துரோகமா?
SLMC போராளிகளை கௌரவமான முறையில் ஹரீஸ் நேர்மையாக மதிப்பதில் பிழையா துரோகமா?
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ரணிலுற்கு ஆதரவளித்து இருந்தது துரோகமா?
முஸ்லிம்களுக்கெதிராக கண்டி திகன அம்பாறை பிரச்சினைகளில் முஸ்லிம் மக்களின் உணர்வுள்ளவன் என்ற வகையில் சமூகத்துற்காக குரல் கொடுத்தது பிழையா துரோகமா?
முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அநீதிகளை அரசாங்கத்தில் இருந்து கொண்டு தைரியமாக அரசாங்கத்திடம் அடித் தொண்டயால் கதறியது துரோகமா?
முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அநீதிகளுக்கெதிராக முதன் முதலாக பாராளுமன்ற தரையில் அமர்ந்து கொண்டு ஏனைய பா.உறுப்பினர்களையும் சமூகத்திற்காக அழைத்தது துரோகமா?
முஸ்லிம்களின் மக்களின் உணர்வுள்ள தலைவன் நீ! முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்கின்றவன் நீ!
உன்னை போன்ற நெஞ்சை நிமிர்த்தி எமது சமூகத்திற்காக குரல் கொடுக்கும் உன் போன்ற தைரியசாலிகளை இந்த அம்பாறை மாவட்டம் பெருமையடைகின்றது  எதிர்பார்கின்றது.

நீ வேண்டும் எம் முஸ்லிம் சமூகத்திற்கு தனி ஒருவனாக!
நீ போராடு பிறரின் சுயநல அரசியலுற்காக அல்லாமல் முஸ்லிம் மக்களுக்காக நீ போராடுவாய் என்று தெரியும்!

கடந்த காலங்கள் நாம் அனைவருக்கும் சான்று
முஸ்லிம் சமூத்தின் நன்மை கருதி சிந்திப்பவர் கௌரவ பா.உறுப்பினர் ஹரீஸ் என்பது யாவரும் நன்கறிந்த விடயம்.
இன்று கீழ்த்தரமாக கௌரவ பா.உறுப்பினர் ஹரிஸை பற்றி விமர்ச்சிக்கு போலி முகநூலுற்கு..

வரும் பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் வெல்ல வேண்டுமாயின்
ஒழுக்கமுள்ள சிறந்த , திறமையான ஆளுமையுள்ள சமூகவாதிகளை நாம் தெரிவு செய்ய முன்வரவேண்டும்  கூடவே எமது சமூகமும் வெல்லும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -