கல்முனை-
அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெயர்பலகை இடப்பட்ட பொழுது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வியாழேந்திரன் சகிதம் அங்கு வந்தவர்கள் அப் பெயர்ப் பலகையை நடவிடாமல் தடுத்து 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அம்பாறை மாவட்டத்திற்குள் உள்வாங்கப்படுவதாகவும், பாரிய நிலப்பரப்பு மட்டக்களப்பு மாவட்டத்தினால் இழக்கப்படுவதாகவும் ஆட்சேபித்து அந்த பெயர்பலகையை நட விடாமல் தடை செய்தார்கள்.
இதையறிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோடிஸ்வரன் அவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை உப பிரதேச செயலாளர் சகிதம் அண்மையில் கல்முனை மாநகர முதல்வர் கௌரவ ரக்கீப் அவர்களை சந்தித்து இப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரியுள்ளார்கள்.
மாவட்ட எல்லையில் உருவாகின்ற மீள் எல்லை நிர்ணயம் செய்வதானால் அது இலங்கையின் அரசியலமைப்போடு சம்பந்தப்பட்டது என்பது தெரியாமலா? இந்த இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது விடயமாக கச்சை கட்டி நின்று கொண்டு அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்கள்? என்று கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தினர் கல்முனை மாநகர முதல்வர் அவர்கள் உடனான இன்றைய சந்திப்பின் போது கேள்வி எழுப்பினர்.
மேலும் கல்முனை மாநகர சபையில் தெற்கு எல்லையில் கல்முனை மாநகரால் நிர்வகிக்கப்படும் பிரதேசங்களை, பிரதேச சபை உருவாக்கம் பற்றிய 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தை மீறி 2005ம் ஆண்டு காரைதீவு பிரதேச சபை உருவாக்கப்பட்டதாகவும், அது ஒரு சட்ட முரணான செயல் எனவும் வலியுறுத்திய மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் ஹாஜி நஸிர் அவர்கள் (மாநகர சபை எல்லை நீங்கலாக) என்ற சட்டத்தின் பதத்தை கருத்தில் கொள்ளாது செய்யப்பட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தேவை ஏற்படும் பட்சத்தில் சட்டத்தை நாடுமாறும் கல்முனை மாநகர முதல்வர் கௌரவ ரக்கீப் அவர்கள் உடனான இன்றைய சந்திப்பில் எடுத்துரைத்தார். அதற்கு தலைசாய்த்த கௌரவ முதல்வர் ரக்கீப் அவர்கள் விரைவில் இப்பிரைச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.