மின் பாவனையை கட்டுப்படுத்த புதிய முறையை கண்டு பிடித்துள்ளார் -மருதமுனை மாணவன்

ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து பாடசாலை மாணவன் சாதனை புரிந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தொழ்நுட்ப பிரிவில் கல்விகற்று வரும் அப்துல் லத்தீப் அஹமது யமீன் என்ற மாணவனே இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

வீடுகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்குமிழ்கள் மற்றும் இதர மின் பாவனைப் பொருட்களை கையடக்க தொலைபேசி ஊடாக தூரத்தில் நின்றவாறே இலகுவாக கையாள முடியும்.

இந்த தொழில்நுட்ப முறையானது குறைந்தளவிலான மனிதவலு மற்றும் குறைந்த நேரத்தில் கூடுதலான பயன்பாட்டை பெறக்கூடியதாக உள்ளது.

தற்போது கொரோனா தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ளதால் மின் ஆழிகளில் கை விரல்களின் தொடுகை இல்லாமல் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக இலகுவாக மின் ஆழிகளின் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும் என இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் விஞ்ஞான புத்தாக்க ஆணைக்குழுவும் தனது கண்டுபிடிப்புக்கான அங்கிகாரத்தை வழங்குவதன் ஊடாக இந்தப் புதிய தொழில்நுட்ப முறையை மேலும் விஸ்தரிக்க முடியும் என்றும் இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -