ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் இலக்கம் ஒன்று (1) வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலந்துரையாடல்கள், கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு தேர்தல் பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான கலந்துரையாடல்கள் கல்குடாத்தொகுதியில் நேற்று (27) இடம்பெற்றது.
இதன் போது அங்கு உரையாற்றிய கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாஹ், "கல்குடா பிரதேசத்தில் கடந்த காலங்களில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விட, எதிர்காலத்தில் மக்களின் அடிப்படைத்தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் எனப்பலதுறைகளிலும் எவராலும் மேற்கொள்ள முடியாத இரட்டிப்பு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விசேடமாக இளைஞர், யுவதிகளுடைய தொழில்வாய்ப்பு விடயத்தில் அதீத கவனஞ்செலுத்தப்படும்.
அத்துடன், தாம் எந்த இனத்துக்கோ எந்த சமூகத்திற்கும் எதிரானவனல்ல. சகல மக்களையும் ஒரு கண் கொண்டு தமது பணியினை முன்னெடுத்து வருவதாகவும், தேவையுடைய மக்களுக்காக என்றும் தனது கரத்தை நீட்டுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன் போது, கல்குடா தேர்தல் தொகுதிக்கான பிரசார அமைப்பாளர் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் மௌலவி, ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் யூ.எல்.அஹமட், வாகரை வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் உள்ளிட்ட தேர்தல் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.