இலக்‌ஷனாம்.இனி...


இலக்‌ஷனாம்.இனி...
+++++++++++
Mohamed Nizous

ஹதிஸ்களை
கட் பேஸ்ட் செய்து
எதிர் வேட்பாளரை
இப்லீஸ் ஆக்குவார்.

வாக்குக் கேட்க
வாக்கியா யாசீன்கள்
வண்டி ஒலி பெருக்கிகளில்
கண்ட படி ஒலிக்கும்.

சாத்தியமாகாத் திட்டங்களை
சத்தியமாக செய்வதாய்
சாத்திரம் சொல்வது போல்
சந்திகளில் சொல்லப்படும்.

அவதூறு சொல்லல்
அவ்றாது போல் தொடரும்.
புறம் பேசுதல்
புரட்சியாகும்.

வீண் விரயம்
விண் விரையும்.
போண் ஐடிகள்
புதிதாய் முளைக்கும்

இஷாத் தொழாமல்
இஸ்லாமிய உம்மா பற்றி
இரவு முழுக்க பேசப் படும்

சூடான பேச்சுக் கேட்டு
சுணங்கி உறங்கி
சுபஹ் தொழுகை
சூரிய ஒளியில் நடைபெறும்.

யாதும் ஊரே
யாவருக்கும் சீற் என்று
தேசியப் பட்டியல்
தேசிக்காயிலும் மலிவாகும்.

மகன் செத்தாலும்
மருமகள் விதவையாகனும்னு
பகலிரவாய் யோசித்து
பக்கா திட்டம் அரங்கேறும்.

நாக் குருதி வரும் அளவு
வாக்குறுதிகள்
வாயால் வழங்கப்படும்.

இறுதியில்
யார் யாரோ வெல்ல
திருவாளர் பொது ஜனம்
திரும்பவும் தோற்றுப் போகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -