கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிறைந்துறைச்சேனை 206சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு வட்டாரக் குழு தலைவர் நாஸர் தலைமையில் ஓட்டமாவடி ஸ்மையில் சென்றரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டு தேர்தல் தொடர்பாக விளக்கமளித்தார்.
இந் நிகழ்வுக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உறுப்பினர் ஏ.எம். நௌபர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தையிப் ஆசிரியர், சட்டத்தரணி எச்.எம்.ராசிக், மத்திய குழு செயலாளர் ஏ. அக்பர் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பிலான கலந்துரையால்; இடம் பெறற்றது.
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டுஇளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.
விழையாட்டுக்கழகத்தினால் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டார கிளையின் ஏற்பாட்டில் களுவாமடு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பிலான கலந்துரையால் இடம் பெறற்றது.
இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதில் கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம். நௌபர், எம்.அமீர் ஆசிரியர், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டார கிளையின் ஏற்பாட்டில் இதில் கலந்து கொண்டவர்களுக்கு பகற்போசனமும் ஏறபாடு செய்யப்பட்டிருந்தது.