இந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் திடீரென ஏற்பட்ட போர் பதட்டத்திற்கான பின்னணி என்ன ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளதனால் உலகத்தின் கவனம் லடாக் எல்லையை நோக்கி திரும்பியுள்ளது.
உலகில் உள்ள நாடுகளின் எல்லைகள் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சில நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளை பகிர்ந்துகொள்வதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றபோது, நிலத்தினை எல்லைகளாக கொண்ட நாடுகளுக்கிடையில் எல்லை பிரச்சினையில்லாமல் இருக்குமா ? ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் தோன்றுவது வழமை.
அதுபோலவே சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் பல தசாப்தங்களாக இருந்துவருகின்ற எல்லைப் பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட யுத்தங்கள் பற்றியும் நாங்கள் அறிந்துள்ளோம்.

ஆனால் இவ்வளவு காலமும் முடங்கிக்கிடந்த இந்த எல்லை பிரச்சினையானது தற்போது கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து இரு நாடுகளும் விடுபடாத நிலையில், திடீரென இந்த எல்லைப் பிரச்சினை விஸ்பரூபம் எடுத்ததற்கான காரணம் என்ன ?
இந்தியாவும், சீனாவும் தங்களது நாடுகளின் எல்லைகளில் படைகளையும், நவீன ஆயுதங்களையும் குவித்துவருவதாகவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இந்த திடீர் பதட்டம் அதிகரித்ததற்கான காரணம் என்ன என்று யாரும் கூறியதாக தெரியவில்லை.

உலக நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற யுத்தங்கள் அனைத்திலும் பொருளாதார நலன்கள் முதன்மை வகிக்கின்றது. இலாபம் இல்லாமல் எந்தவொரு நாடுகளும் யுத்தம் செய்வதில்லை. அதுபோலவே இலாபத்தை நோக்கமாக கொண்டதுதான் இந்த பிரச்சினையாகும்.

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சீனாவில் முதலீடுகளை செய்துள்ளது. அங்கு ஏற்பட்ட கொரோனா வைரசின் தாக்கத்தினால் சீனா மட்டுமல்லாது உலகமே முடங்கிவிட்டது. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவுக்கு எதிராக கிளம்பியுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் சீனாவில் முதலீடுகளை செய்துள்ள மேற்கு நாடுகளின் நிறுவனங்களை வளைத்துபோட்டு அவர்களை இந்தியாவுக்கு வரும்படியும், அங்கு தங்களது முதலீடுகளை செய்யும்படியும் அழைப்பு விடுத்துள்ளது இந்தியா. இது சீனாவுக்கு கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தனது நாட்டிலுள்ள முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு செல்லாது தடுப்பதற்காக இந்தியா ஓர் பாதுகாப்பற்ற நாடு என்று காண்பிக்கும் தேவை சீனாவுக்கு உள்ளது. இதனாலேயே சீனா வலிந்து இந்தியாவை வம்புக்கு இழுத்து அச்சுறுத்துகின்றது.
இதற்கிடையில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் சீனாவை பழிவாங்க இதனை சந்தர்ப்பமாக பாவிக்கின்றது. அதனால் இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் எது எப்படி இருப்பினும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதில் இரானுவத்தினர்களைவிட பொதுமக்களே அதிகமாக கொல்லப்படுவார்கள். எனவே இந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் யுத்தம் ஏற்படாமல் அது பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்படல் வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -