உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபயொருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று(10) உத்தரவிட்டார்.
இகலான்நொச்சிய,ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் புல்மோட்டை பகுதியில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபுபக்கருக்கு உதவி வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து புல்மோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவிலிருந்து அபுசாலி அபுபக்கர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.