ஏறாவூர் நகரபிதா பாசித் அலி, அரசதுறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி.!

வஷிம் அக்ரம்-

றாவூர் நகரபிதா பாசித் அலி, அரசதுறை அதிகாரி ஒருவரால் சராமாரியாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது:

ஏறாவூரில் இருந்து அகற்றப்படும் திண்மக்கழிவுகளை ஏறாவூர் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அரச காணியொன்றில் காலங்காலமாக நிரப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம்( 3) சகோதர இன மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பொறியியலாளர் ஒருவரும் இன்னும் சிலரும் குறித்த பிரதேசத்துக்கு சமூகமளித்திருந்து, ஏறாவூர் நகரபிதா வாசித் அலியையும் வரவழைத்திருந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் நிரப்பப்படுதலானது அக்கழிவுகள் விலங்கினங்கள் ஊடாக தமிழ் மக்களின் வதிவிடங்களுக்கு கடத்தப்பட்டு அப்பிரேச மக்கள் துர்நாற்றங்களுக்கு உள்ளாகுவதாகக்கூறி மாற்றுவழிகளை கையாளுதல் பற்றி ஆலோசித்திருந்தனர். இதன்போது ஒரு சில கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது கூடவே வந்திருந்த அரச உத்தியோகத்தரான அந்த சகோதர இனத்து பொறியியலாளர் அவ்விடத்தில், வாசித் அலியை மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட ஓர் அரச பிரதிநிதி எனக் கருதாது, நகரபிதா என சற்றேனும் கெளரவம் கொடுக்காது, அதிகார தோரணையில் மோசமான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார்.

உனது முகத்தை மூடக்கூடிய மாஸ்க் எங்கே, நீர் சபாபதி என்றால் எதற்கான சபாபதி என்றெல்லாம் மிக மோசமான வார்த்தைகளால் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டிருக்கிறார்.

 இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென
ஏறாவூர் நகர தவிசாளரை தள்ளிவிட்டிருக்கின்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத தவிசாளர், திண்மக்கழிவுகளுடனான திடலில் விழுந்திருக்கின்றார்,
விழுந்த அவர் சுதாகரித்துக்கொள்ளுவதற்கு முன்னராக, அவரது நெஞ்சுப்பகுதியில் காலை வைத்து மிதித்துமுள்ளார்.

இதனால் மூச்சடைப்புக்குள்ளான நகர பிதா வாசித் அலி தடுமாற்றத்துக்குள்ளாகி இருந்த நிலையில் , அருகில் நின்ற அவரது பணியாளர்கள் தனது அதிகாரியை ஒருவர் அடிப்பதை சகித்துக்கொள்ள முடியாததால் ஓடோடிச்சென்று குறித்த சகோதரத்து இன பொரியியலாளரை தடுக்க முற்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் விலகிச் சென்றதாக தெரியவருகின்றது. தற்போது வாஷித் அலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் இரு தரப்பினருடனும் தொடர்பு கொண்டு தகவல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவிருப்பதால் மீண்டும் மேலதிக தகவல்களுக்காக இம்போட்மிரருடன் இணைந்திருங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -