மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல், தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பான அறிவிப்பு


த வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்:

01. மதவழிபாட்டுத் தலங்கள்

மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது.

• சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
• இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும்.

02. தனியார் வகுப்புக்கள்
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

• சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.

நாலககலுவௌ
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -