கல்முனை வரலாற்றில் சீற்ரிஸ்கன் ,பாரிசவாதசிகிச்சை முதன்முறையாக ஆரம்பம்!

காரைதீவு  சகா-

'அம்பாறை மாவட்ட கரையோர வரலாற்றில் முதன்முறையாக சீற்றி ஸ்கன் வசதியும் ,பாரிசவாத உடனடிச்சிகிச்சையும் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.'

என்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

'கிழக்குவாழ் மக்களுக்கு இதுவோர் அரிய வரப்பிரசாதமாகும். மேற்படி சேவையை நாடுவோர் எமது வைத்தியசாலைக்கு 24மணிநேரமும் வருகைதரலாம் 'எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

பலவருடகாலமாக இப்பிராந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவந்த சீற்றி ஸ்கன் வசதி தற்போது எமது வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தவசதியை ஏற்படுத்துவதில் எமது கதிரிவியக்கவியல் வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.டிலக்குமாரின் அர்ப்பணிப்பான பங்களிப்பு என்பது மிகமுக்கியமானது.

இதேவேளை பலதரப்பட்ட அன்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இவ் சீற்றி ஸ்கன் இயந்திரத்தைப்பெறுவதில் நல்கப்பட்டுள்ளது.
இன்றைய மகிழ்ச்சியானமனநிலையில் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி என்றவகையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

மட்டக்களப்பு அம்பாறை பொதுவைத்தியசாலைகளுக்கு அப்பால் இப்பிராந்தியத்தில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில்தான் இந்த சீற்றி ஸ்கனிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் முதல் பாரிசவாதநோய்ச்சிகிச்சை!

மேலும் இந்த சீற்றி ஸ்கன் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மற்றுமொரு பாரிய நோய்க்கு சிகிச்சை வழங்கவும் பொதுவைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி என்.இதயகுமார் முன்வந்துள்ளார்.

அதாவது பக்கவாதம் அல்லது பாரிசவாதம் எனும் நோயைக் உடனடியாகக் குணப்படுத்தும் சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியகலாநிதி என்.இதயகுமாரின் சேவை பாரிசவாதத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பது இப்பகுதிமக்களுக்கு அரிய வரப்பிரசாதமாகும்.

இச்சிகிச்சைவசதி மட்டக்களப்பு அம்பாறை கல்முனைப்பிராந்தியங்களில் முதற்தடவையாக எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால் சகல மக்களும் உடனடியாக அதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் இங்குவந்து சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அல்ட்ரா ஸ்கன் வசதி!

இதேவேளை சீற்றி ஸ்கன் வசதிக்கு அப்பால் உயர்தரத்திலான அல்ட்ரா சவுண்ட் ஸ்கன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்தடவையாக இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஈரல் தொடர்பிலான நோய்களையும் புற்றுநோய்க்கட்டிகளை இனங்காணவும் முடியும்.
எனவே இவ்வசதிகளை பொதுமக்கள் நன்கு உரியவேளையில் வந்துபெற்றுக்கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -