வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதி பேத்தாழையில் இன்று (03.06.2020) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர்; ஒருவர் உயிர் இழந்துள்ளதாக கல்குடா பொலிசாஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியை சேர்ந்த முஹம்மது நாசர் முகம்மது நைறூஸ் (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிரே சென்ற சிறிய கென்ரர் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவர் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கென்ரர் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் கல்குடா பொலிசார் விசாரணைகளை மெற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் கென்ரர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடள் கென்ரர் வாகனமும்; பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இளைஞரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பாரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -