கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட நகர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு..!

எப்.முபாரக்-
ந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட நகர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்தி தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குரங்குகள் கூட்டமாக சென்று வியாபார நிலையங்களின் ஒடுகள் மற்றும் தகரங்களுக்கு மேல் ஏறி தொல்லை படுத்துவதாகவும்,மின் கம்பங்களில் நின்று கொண்டு குட்டி தாய் போன்ற குரங்குகள் மாங்காய் மற்றும் இதர பழங்களின் விதைகளை வீசுவதாகவும் கந்தளாய் நகரில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று வீடுகளுக்கு வெளியிலும்,வர்த்தக நிலையங்களுக்கு வெளியிலும் உலர விடும் ஆடைகள் மற்றும் இதர பொருட்களை கவ்விச் செல்லுவதாகவும் பின்பு அதனைக்கொண்டு சென்று கந்தளாய் நகரின் நடு வீதியில் போடுவதாகவும் அங்கு வசிப்போர் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளை துரத்தி துரத்தி சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தி தருமாறு கந்தளாய் நகர வியாபாரிகளினால் கந்தளாய் பிராந்திய வன ஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் கோரியுள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -