தேர்தலை நினைத்தால் சில்லறை கட்சிகளுக்கு குலை நடுங்குகிறது : தே.கா பிரிவு செயலாளர் சட்டத்தரணி றிபாஸ்.



நூருள் ஹுதா உமர்-
ந்த ஆண்டின் இடைக்கால பாதீடு கூட சமர்ப்பிக்க முடியாத நிலையில் இலங்கை அரசின் நிதி நிர்வாகத்தை கையாளுவதில் நிறைய சிக்கல்கள் உண்டு. அதனால் பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும் எனும் நிலைக்கு இலங்கை அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க தயாராகிக் கொள்ள வேண்டும். இது அவரின் கடமையாகும் என தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கல், சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

நேற்று (31) மாலை தேசிய காங்கிரசின் மருதமுனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் தொடர்ந்து பேசுகையில்

நாட்டில் நிலையான அராசங்கம் நிறுவப்பட வேண்டியது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல்களை நடத்தவே ஆணைக்குழுவொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு அவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீதிமன்றில் தீர்ப்பு வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும், தொலைபேசிகாரர்களும், இதர சில்லறை கட்சிகளும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என எதற்காகக் கூறுகின்றார்கள் என்று மக்கள் அறியாமல் இல்லை. இவர்களின் தோல்வி பயம் தெளிவாக தெரிகிறது. இவர்களின் விரிசல்களை சரி செய்து மீண்டும் ஒன்றாகி நாட்டை மீண்டும் சீரழிக்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

எதிரணில் இருக்கும்போது தேர்தல்களை நடத்துமாறுதான் எல்லோரும் வலியுறுத்துவார்கள். ஆனால் இங்கு தலைகீழாக நடக்கிறது.

தேர்தலின் ஊடாக வெற்றிபெற்று ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய சதித்திட்டங்கள் ஊடாக அல்ல. இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

உலகை கொரோனா வைரஸ் தாக்கி அச்சுறுத்திக்கொண்டிருந்த உச்சகட்ட காலத்திலையே தென்கொரிய அரசாங்கம் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடாத்திமுடித்தது. 

இந்த வைரசை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் சிறப்பாக கையாண்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக தேர்தலை சிலகாலம் தாமதித்து நடத்த தீர்மானித்துள்ளது. என்றாலும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து கொரோனாவை அழிக்கும் வரை தேர்தலை நடாத்தாது இருக்க முடியாது. இதற்கிடையில் நாட்டை கொண்டுசெல்ல திறைசேரியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட ஒழுங்குகள் இருப்பதானால் அதுதொடர்பிலான நெருக்கடியையும் அரசு சந்திக்க வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் அரசியலமைப்பு பேரவையால் நாட்டைப் பாதுகாக்கப் போகிறோம் என கூறி கொண்டு உருவாக்கிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையே உருவாகும் கருத்தியல் வேறுபாடுகளால் தேர்தல் ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது. என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -