உகந்தமலை முருகனாலயத்தில் குழாய்க்கிணறுகள் !


காரைதீவு சகா-
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய வளாகத்தில் புதிதாக நான்கு குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
காரைதீவு இளைஞர்களின் முழுமுயற்சியால் இக்கிணறுகள் அமைக்கப்பட்டுவருவதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
கொரோனாவின் உக்கிரம் சற்று தணிந்துள்ளவேளையில் ஆடிவேல்விழாவை ஆலயம் எதிர்நோக்கியுள்ள காலகட்டத்தில் இத்தகைய கிணறுகள் அமைக்கப்படுவது சாலப்பொருத்தமாகும் என்று மேலும் சொன்னார்.
காரைதீவு மக்களின் ஆன்மீகப்பற்றின் பிரதிபலிப்பாக ஏலவே எமது ஆலயவளாகத்தில் இருபெரும் யாத்திரீகர் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்சமயம் 4 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுவருவது பாராட்டுக்குரியது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -