அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு


பாறுக் ஷிஹான்-
ட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனை கிட்டங்கி நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் இன்று மாலை இடம்பெற்றதுடன் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் உள்ளிட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன் விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கருத்துப் பரிமாறி தீர்வொன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -