நிருபர் எம்.கிருஸ்ணா-
அட்டன் டிக்கோயா மருத்துவர் சங்கத்தின் மாதாந்த கூட்டம் அட்டன் சக்தி மண்டபத்தில் 30ஃ06 நடைபெற்றது.
மருத்துவர் சங்கத்தின் தலைவர் எஸ். உதயசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிகையலங்கார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கொவிட்- 19 தொற்று சுகாதார பாதுகாப்பு முறைமையில் தொழில்துறையை முன்னெடுத்து செல்வது மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் முன்வந்து உதவியவர்களுக்கு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்பது என அனைவராலும் ஏகமானதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது