கிழக்கு மாகாணத்துக்கு கெபினெட் கிடைக்கக் கூடாது என்பதற்காக தேசியப்பட்டியலால் உண்மைகளை மறைத்த ஹக்கீம் சேர்.

ன்று ஊடகங்களை, குறிப்பாக முகப் புத்தகத்தினை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான எந்தவொரு கருமத்தினை மேற்கொண்டாலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் தேசிய பட்டியல் கிடைக்காததால் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என குறிப்பிட்ட ஒரு சாராரினால் கொடுக்கப்படுகின்ற பதிவினையும் விமர்சனத்தினையும் காணக்கூடியதாக உள்ளது.

சில உண்மைகள் தெரியாது சிலரது கைப் பொம்மைகளாக செயற்படும் அந்த அப்பாவி சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில உண்மைகளை இங்கு தருகின்றேன்

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்த ஹக்கீம் சேர், எமது மக்களின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனாவுக்கே என்ற செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியின் கருத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், தபால் வாக்குகள் அளிக்கப்பட்டு சில நாட்களின் பின்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு என்ற சைகையினை ஹக்கீம் சேர் காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினைத் தொடர்ந்து, நல்லாட்சி அரசின் பார்வையில் ஹக்கீம் சேரை விட, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியே முழு ஆதரவினை மக்களிடத்தில் பெற்றுத் தந்தவர் என்ற நல்லபிப்பிராயமானது, ஹக்கீம் சேரினைத் தவிர்த்து, அன்று செயலாளர் நாயகமாக இருந்த எம்.டி.ஹஸனலியினை கேபினெட் அமைச்சராக தீர்மானிக்கும் நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றது.

ஆனால் கட்சியினை பாதுகாக்க வேண்டும் என்ற செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியின் கொள்கையும், ஹக்கீம் சேரின் பதட்டமும் கேபினெட் அமைச்சினை ஹக்கீம் சேருக்கு வழங்கும் நிலைப் பாட்டுக்கு வழிவகுத்தது எனலாம்.

செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலிக்கு இராஜாங்க அமைச்சு வழங்கும் சந்தர்ப்பத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பின் ஹக்கீம் சேர் உட்பட செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலிக்கும் சேர்த்து இரண்டு கேபினெட் அமைச்சுக்களை வழங்குவதாக ஆதாரப்பூர்வமான பல தகவல்கள் உயர்மட்டத்தில் இருந்து கசிந்து வெளியாகியது. இத்தகவல் ஹக்கீம் சேரை பாரிய குழப்பத்துக்கு கொண்டு சென்றது.

பாராளுமன்றத் தேர்தலும் வந்தது, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் ஹக்கீம் சேரின் பார்வையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவருக்கு கேபினெட் அமைச்சு கிடைக்கும் பட்சத்தில், அது தனது தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாகி விடும் என்பதை மனதில் கொண்டு, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து, தேசிய பட்டியல் தருவதாக ஹக்கீம் சேர் பல வாக்குறுதிகளை வழங்கி, நம்பவைத்து அவரது பெயரை தேசியப்பட்டியலில் இட்டார்.

அதே போல் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ஹக்கீம் சேரின் பார்வையில், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக இருந்த தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தேர்தலில் வென்று கேபினெட் அமைச்சினைப் பெற்றால், அதுவும் தனது தலைமைத்துவத்துக்கு சவாலாகிவிடுமென, தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து தேசியப்பட்டியலில் தருவதாக வாக்களித்து, நம்பவைத்து அவரது பெயரையும் ஹக்கீம் சேர் தேசியப்பட்டியலில் இட்டார்.

தேர்தல் முடிந்த கையோடு செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் தேசியப்பட்டியல் கேட்கிறார்கள் என, நடந்தவைகளை மறைத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு முரணாக, பல கட்டுக் கதைகள் புதிய வடிவில் வெளியாக்கி, மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு, அவர்களது நற்பெயரையும் களங்கப்படுத்தினர்.

குறிப்பாக கிழக்கில் இருந்து மக்களைக் கவரும் முகமாக மேலே வருகின்ற அரசியல் தலைவர்களை அல்லது தனது தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக முன்னேறுகின்றவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எரியும் ஹக்கீம் சேரின் தந்திரோபாய அணுகுமுறைக்கு அமைவாக, தனது தலைமைத்துவத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற அகோர பசிக்கு இக்காலப் பகுதியில் பலி கொடுக்கப் பட்டவர்களே தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் மற்றும் செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியும் என்பது உறுதி செய்யப்பட உண்மையாகும்.

இவ்வாறு அன்றும் சரி இன்றும் சரி காலத்துக்கு காலம் ஹக்கீம் சேரினால் அரங்கேறுகின்ற ஒரு அரசியல் மாபியாவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையில் போட்டியிட தயாராக இருந்த இவ்விருவரையும் தேர்தலில் களமிறங்க விட்டிருந்தால், இவர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒரு காரணமாவது பொருந்தி இருந்திருக்கும்.

ஆனால் ஹக்கீம் சேர், அவரையும் தாண்டி இன்னொருவருக்கோ அல்லது கிழக்கு மாகாணத்துக்கோ கேபினெட் அமைச்சினை வழங்க ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக தடையாக, விருப்பமின்மையை பிரதிபலித்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹரீஸ் எம்பி மற்றும் ரிசாட் பதுர்தீன் போன்றோர் முஸ்லீம் காங்கிரஸை விட்டு வெளியேற இந்த கெபினெட் அமைச்சினை வடகிழக்குக்கு கொடுக்காது ஹக்கீம் சேர் தடுத்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே பல முஸ்லீம் காட்சிகள் வடகிழக்கில் தோன்ற காரணமாகவும் அமைந்தது.

ஹக்கீம் சேரின் இவ்வாறான அணுகு முறையினை புரிந்து கொண்ட இவர்கள் இருவரும், தங்களை சுற்றி பல சதிகள் நடப்பதை உணர்ந்து கொண்டு, இன்னும் இங்கிருந்தால் இதைவிடவும் மோசமான பலிகள் எம்மீது சுமத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால், ஒதுங்கிச் சென்றார்களே தவிர, பதவி பட்டங்களுக்காக அல்ல என்பதே உண்மையாகும்.

தவிசாளர் பஷீர் சேகுதாவூதும், செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலியும் பல இடங்களில் பேசும் போது நாங்கள் தேர்தலில் போட்டியிடவே கேட்டோம். தேசியப் பட்டியல் கேட்கவில்லை என்பதனை உறுதிப் பட தெரிவித்தார்கள். ஹக்கீம் சேரும் சில இடங்களில் பேசும் போது இவர்கள் தேசியப் பட்டியல் கேட்கவில்லை என்பதனை தெரிவித்து இருந்தார்

மேற் சொன்ன காரணங்களின் பிரகாரம் இவர்கள் இருவரும் தேசியப்பட்டியல் கேட்டிருக்கவில்லை என்பது தெளிவாவதுடன், இது திட்டமிட்ட சதியாக, சொல்லப்பட்ட பொய்யான கட்டுக் கதை என்பதும் இங்கு தெளிவாகிறது.

இவ்வாறான பாரிய பொய்யான பல பலிகளை தாங்கிக் கொள்ள முடியாமலேயே இவர்கள் கட்சியை விட்டு வெளியாகி ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை உருவாக்கினார்கள் என்றாலும் அதில் பிழையும் இல்லை எனலாம்.


ஐ .எம். ஹாரிப்
பிரச்சாரச் செயலாளர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -