மத்திய வங்கி மக்களுக்கு சேவை செய்வதை விட்டு தொடர்ந்தும் ஒரு சாரருக்கு மாத்திரம் கடந்த காலங்களில் சேவையாற்றி வந்துள்ளது.கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் த.பினேன்ஸ் நிறுவனம் சேவையினை செய்துள்ளது இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.இதற்கு 250 கிளைகள் இருந்தன. இன்று அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
லலித் கொத்தலாவல கையில் இருக்கும் போது கூட நட்டம் ஏற்பட்ட போதிலும் மூடும் அளவுக்கு வரவில்லை. ஆனால் மத்திய வங்கி கையில் எடுத்ததன் பின் அதனை இன்று மூடியுள்ளது.இதனால் மக்களின் கோடிக்கணக்கான காசு கொடுக்கப்படாமல் உள்ளன.ஐயாயிரத்துக்கும். மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
மத்திய வங்கி பாரமெடுத்தன் பின்னர் மக்கள் மத்திய வங்கியின் நம்பிக்கை வைத்து பணம் வைப்பிலிட்டனர்.நல்ல ஒரு நிலையில் கம்பனி நடக்கும் என்று பொது மக்கள் எண்ணினார்கள். ஆனால் மத்திய வங்கி செய்தது மிகவும் மோசமான வேலை இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி அவர்கள் மத்திய வங்கியின் அதிகாரிகளை சந்தித்து மத்திய வங்கி செயப்பாடு இதை விட நாட்டிக்கு பயனுடையதாக அமைய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு நாம் ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். என இலங்கை தொழிலாளர் கட்சியின் கூட்டமைப்பு தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் கட்சி இன்று (18) ஒழுங்கு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் ..மத்திய வங்கியின் அதிகாரிகள் ஜனாதிபதி கூறுவதை கூட செவிமடுப்பில்லை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரதத்தினை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி என்பது அனைவருக்கும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார ரீதியில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் மத்திய வங்கிக்கு உள்ளது. அது எவருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது.அதே நேரம் இன்று ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் செயலணி வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கக்கூடாது அதனை மலையக பகுதியிலும் அமைத்து இன்று கொNhனாவால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளவர்களின் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுபப்தற்கும்.
இந்த நாட்டுக்காக முழு மனதுடன் உழைத்த மக்களுக்கான காணி உரிமை வீட்டு உரிமை தொழில் பாதுகாப்பு தோட்ட சுகாதாரம் ஆகிய வற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்யும் பட்சத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து தமது கட்சி கைகோர்த்து செயப்பட தயார் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.