கணக்குத் திறக்கத் தேவையில்லை முன்னைய முறைமையிலேயே கொரொனா நிவாரணம் - ராம்

கொரொனா காலத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்ட 5000/- நிவாரணத் தொகையை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு,
புதிய நடைமுறையாக ஒவ்வொரு பயனாளியும் சமுர்த்தி வங்கிகளில் கணக்குத் திறந்து அதனூடாக வழங்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி சாத்தியமற்றது என தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க முன்னைய நடைமுறையிலேயே மேற்படி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய முன்னணி யின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அனைத்து பயனாளிகளும் வங்கி கணக்கு திறந்து அதன் ஊடாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை புரிந்து கொண்டு முன்னைய நடைமுறையிலேயே மேற்படி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி இருக்கும் மாவட்ட செயலாளர், மாவட்ட சமுரத்தி ஆணையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் , கிராம சேவகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதேச சபைஉறுப்பினர் ராம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நோர்வூட், அட்டன்,நோட்டன் விதுலிபுர,கினித்தேன ஆகிய சமுர்த்தி வங்கிக்குட்பட்ட பயானாளிகளுகான இரண்டாம் கட்ட நிவாரணம் கொடுப்பனவு இன்று (11)முதல் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -