காரைதீவு சகா-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி பாடும் பாரம்பரிய சடங்கு நாளை அதிகாலை 09.06.2020ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த வைகாசிச்சடங்கு கடந்த திங்கள் (1) மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியது.
கொரோனாதடுப்பு நடைமுறைக்கிணங்க மட்டுப்படுத்தப்பட்டளவில் நிருவாகத்தினர் முகக்கவசம் சமுகஇடைவெளியைப்பேணி இச்சடங்கினை மேற்கொண்டனர்.
தொடர்ந்து எட்டு நாட்கள் சடங்கு நடைபெற்று வருகிறது.தினமும் சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.. சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெற்றுவருகிறது.
இன்று 08.06.2020ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப.3.00மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.அதேவேளை 15.06.2020ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை இடம்பெறும்.
கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் யாவும் வழமைபோல் நடைபெறும். ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையில் சகலதும் பட்டுபபடுத்தப்பட்ட அளிவில் நடைபெறறுவருவது குறிப்பிடத்தக்கது.