பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுவதற்கு தவறியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி விவகாரம் தொடர்பில் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது