கொரோனா வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சம் எழுந்துள்ளது.
இதன்படி, தற்போது நியூஸிலாந்தில் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் கடந்த 24 நாட்கள் எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத நிலையில் இருவர் இனம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரும் பிரித்தானியாவில் இருந்து நியூஸிலாந்துக்கு வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் குறித்த இருவருக்கும் தமது பெற்றோரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 506 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 22 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.