மறைந்த அமைச்சரின் குடும்பத்தை விமர்சிக்க வேண்டாம்.


தலவாக்கலை பி.கேதீஸ்-
ரு தலைவனின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் இறப்பு உண்டு. இந்திய வம்சாவழி மக்களுக்கு ஏகோபித்த துணிச்சல் மிக்க தலைவனாக வாழ்ந்து மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை கேட்டு இந்த நாடே இன,மத,மொழி பேதமின்றி சோகத்தில் மூழ்கியது. ஒரு வீரத் தலைவனை இழந்த சோக கடலில் மலையகமே மூழ்கியது. ஒரு குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல் முழு மலையகமும் கண்ணீரில் நனைந்தது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்து மறைந்த துணிச்சல் மிக்க வீரத் தலைவனுக்கு அலை அலையாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒரு சில அரசியல்வாதிகளின் அடிவருடிகள் போலியான செய்திகளை அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது சேறு பூசும் விதமாக சமூக வலைத்தளங்களில பரப்பி வருகின்றனர். இச்செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தார் மீது பரப்படும் போலியான விமர்சனங்களுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் என்ற நெருக்கடிக்குள் எமது நாடு இருந்தாலும், ஒரு இந்திய வம்சாவழி தமிழனின் இறுதிக் கிரியைகளை பூரண அரச மரியாதையுடன் செய்த அரசாங்கத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். மாபெரும் தலைவனின் மறைவு செய்தி கேட்ட முதல் தொடர்ச்சியாக தங்களுடைய தொழில்களுக்குச் செல்லாமல் அனுதாபம் தெரிவித்து, ஊரடங்கு வேளையிலும் சமூக இடைவெளியைப் பேணி வீதிகளில் நின்று மலர்தூவி தலைவனை வழியனுப்பி வைத்த எமது உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆற்றிய சேவைகளை முழு நாடுமே நன்கு அறியும். மலையக மக்களை தலை நிமிர வாழ வைத்த தலைவனின் புகழை பாடாமல் இகழ்வது நாகரீகமா? சமூக வலைத்தளங்களில இவ்வாறான போலியான செய்திகளை பரப்புவது சிலரின் அறியாமையை எடுத்து காட்டுகின்றது. அரசியல் வங்குரோத்து காரணமாக பல கற்பனைகளையும் பொறுத்தமற்ற படங்களையும் பொறுத்தமற்ற விதத்தில் எடிட்டிங் செய்து பதிவிடுகின்றனர். இவ்வாறான ஒரு சிலரின் இழிவான செயல்கள் சமூகத்தின் பின்னடைவையே எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே சில அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் போலி பிரச்சாரங்களையும் போலி விமர்சனங்களையும் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான பொய் பதிவேற்றங்களினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சியை ஒருபோதும் எவராலும் தடுக்க முடியாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -