மனோகணேசனின் கூற்றுக்கு இ.தொ.காவின் பிரச்சார செயலாளர் கணபதி கனகராஜ் பதில்




அட்டன் கே.சுந்தரலிங்கம்-

னோகணேசன் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனாகரிகமான அரசியல் செய்கிறது என தெரிவித்திருந்தார் ஆனால் மனோகணேசன் அவர்கள் ஒன்றை மாத்திரம் தெரிந்து கொள்ளவேண்டும் நாங்கள் தலைவரை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இ.தொ.காவினை கோபமூட்டி அதனூடாக அவர் அரசியல் செய்ய எத்தணிக்கிறார்.

மனோகணேசன் அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை அவர் மறந்தே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் மாகாண சபைக்கு தெரிவாவதற்கு 3000 விருப்பு வாக்குகளையே பெற்றிருந்தார்.

அப்படியான ஒருவர் அவற்றையெல்லாம் மறந்து இவ்வாறு இ.தொ.கா அநாகரிகமான அரசியல் செய்கிறது என்று சொல்வது யார் அநாகரிகமானவர் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சார செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இன்று 14.06.2020 அட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அதில் எவ்வித மாற்றமும் இல்லை. 

தலைவர் இறப்பதற்கு ஒருசில மணித்தியாலங்கள் முன் கூட அதைப்பற்றிதான் பேசப்பட்டன.

 அதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் அதனை தருவதாகவும் உறுதியும் அளித்துள்ளார்கள்.


அது நிச்சயம் கிடைக்கும். ஆனால் கடந்த காலங்களில் சஜித் பிரேமதாச அவர்களின் மேடையில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளஉயர்வை பெற்றுத்தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள் அப்படி 1500 பெற்றுத்தருவது என்றால் கம்பனிகளுடன் பேசி பெற்றுத்தரவேண்டும். 

இன்றும் அவர்கள் பலமிருந்தால் கம்பனிகளுடன் பேசி பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. நாங்கள் சவால் விடுகிறோம் எங்கள் அங்கத்தவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை புரிந்து கொண்டுள்ளார்கள்.

முடிந்தால் உங்கள் அங்கத்தவர்களுக்கு அந்த 1500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டு இ.தொ.காவைப் பற்றி குறை கூறுங்கள். இ.தொகாவை குறை கூறி அநாகரிகமான அரசியலை மேற்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம் இன்று சஜித் அணியில் இருந்து நாளுக்கு நாள் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் இதற்கு காரணம் தலைவராக வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு அணியை உருவாக்கியதால் அதிலிருந்து பயனில்லை என முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பலர் வெளியேறிவருகிறார்கள்.

ஆகவே எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் மக்கள் இதனைப்புரிந்து இம்முறை ஐக்கியத் தேசியக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தகுந்த பதிலடிகளை கொடுப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -