நாங்கள் மலையகத்தில் பல்வேறு விதமான சேவைகளை முன்னெடுத்துள்ளோம். வீதிகள் அபிவிருத்தி செய்துள்ளோம.; ,காபட் பாதைகள் போட்டுகொடுத்துள்ளோம்,ஆலயங்கள் அபிவிருத்தி செய்துள்ளோம்,வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளோம். அதிகார சபை உருவாக்கியுள்ளோம்,பிரதேசபைகளை அதிகரித்துள்ளோம்.இவ்வாறு பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து அதனை நிறைவு செய்து விட்டு வந்து தான் உங்களிடம் வாக்கு கேட்கிறோம். ஏனையவர்களை போல் ஒன்றுமே செய்யாது. நாங்கள் வந்து வாக்கு கேட்கவில்லை.எனவே ஆரம்பித்த வேளைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவே நாங்கள் வாக்கு கேட்கிறோம்.ஆனால் இன்று யாருடைய கைகூலியாக இருந்து கொண்டு நுவரெலியா மாவட்டத்தின் வாக்குகளை சிதறடிப்பதற்காக வாக்கு கேட்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறப்போவதுமில்லை. ஆகவே அவ்வாறானவர்களுக்கு இளிக்கும் வாக்குகள் குப்பைத்தொட்டியில் இடுவதற்கு சமனானது. என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
பொகவந்தலாவை பகுதியில் நேற்று (28) நடைபெற்ற தமிழ் முற்றோக்கு அணியின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் எமது அணிக்கென்று நல்ல ஒரு பெயர் இருக்கின்றது முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.நான் உபதலைவராக இருக்கிறேன் ராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கிறார். இன்று நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுபவர்களை எடுத்துக்கொண்டால் அதிகமானவர்களுக்கு விலாசமே கிடையாது.இந்த தேர்தலிலும் வெற்றிப்பெறப்போவது எமது அணிதான் ஆகவே தேர்தலின்; பின்னர் நாங்கள் ஆளும் கட்சியி;ல் தான் இருப்போம். திகாம்பரம் நிச்சயம் அமைச்சு பதவியினை மீண்டும் பெறுவார்.மலையக மக்களுக்கு நாங்கள் தொடர்;ந்தும் சேவையாற்றுவோம் ஒரு சிலர் பொகவந்தலாவை பகுதிக்கு எவ்விதமான சேவையினையும் முன்னெடுக்காது தொiகாட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல பொகவந்தலாவை பகுதிக்கு அதிகமான வேலைகளை செய்கொடுத்து விட்டு தந்து விட்டு வந்து வாக்கு கேட்கிறோம.; ஆகவே மக்கள் சிந்தித்து உங்கள் பொன்னான வாக்குகளை எமக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.