கடந்த 10 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சியின் பலனாக தற்போது எமது வைத்தியசாலையில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பொதுமக்கள் 24 மணிநேரமும் பெற்றுக்கொள்ளலாம் என கதிரிவியக்கவியல் வைத்தியநிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் டிலக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இதேவேளை சீ. ரீ. ஸ்கான் வசதிக்கு அப்பால் உயர்தரத்திலான அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இவ்வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் மூலமாக ஈரல் தொடர்பிலான நோய்களையும் புற்றுநோய்க் கட்டிகளையும் துல்லிதமாக இனங்காணவும் முடியும் என்றும், எனவே இவ்வசதிகளை பொதுமக்கள் நன்கு உரிய வேளையில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இரத்தக்குழாய் அடைப்பை பரிசோதிக்கும் அன்ஜியோகிறாம் சோதனையும் எமது வைத்தியசாலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் என்றும், அருகிலுள்ள வைத்தியசாலைகளும் இவ்வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மகிழ்சி தெரிவித்தார்.