சௌபாக்கியா பயிர் செய்கை திட்டத்திற்கு இலவசமாக சேதனப்பசளை


எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளபடும் சௌபாக்கியா பயிர் செய்கை திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்திசெய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை இலவசமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் பிரதேச செயலகத்தில் வைத்தி நேற்று கையளிக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.மஜீட், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாறூக், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், நிர்வாக உத்தியோகத்தர்(கிராமசேவக) எம்.ரீ.தாஸீம், சமூக சேவைகள் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் மாஹிர் உள்ளிட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -