மங்கள சமரவீரவின் தீர்மானம் எம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

முன்னாள் அமைச்சர் திரு மங்கள சமரவீர அவர்கள் இம்முறை தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என்றும் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் அண்மையில் அறிவித்துள்ளார். 
இவரின் இந்த அதிரடி முடிவு இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நம் நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற இன முறுகல்களின் போது சிறுபான்மை மக்கள் சார்பாகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவ்வப்போது நாடாளுமன்;றத்திலும் அதற்கு வெளியிலும் துணிவுடன் குரல் கொடுத்து வந்த ஒரு மூத்த சிரேஷ்ட அரசியல்வாதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தனது பத்திரிகைகளுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக 'ஊநலடழn வுநய (சிலோன் ரீ)' 'இலங்கைத் தேயிலையை' முதன் முதலாக சர்வதேச உலக நாடுகளுக்கு இந்த வியாபார அடையாளச் சின்னத்துடன் அறிமுகப்படுத்தியவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள்தான் என்பதனையும் இதன் மூலம் எமது நாட்டிற்குரிய அந்நிய செலவாணிகளை கனிசமாக பெற்றுக்கொடுப்பதற்கு இவர்கள்தான் மூல காரணமாக அன்று முதல் இன்று வரை இருந்து வந்துள்ளார்கள் என்பதனை மிகவும் ஆணித்தரமாகவும் நன்றியுனர்வுடனும் எடுத்துரைத்தவர்தான் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என்பதனை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.

இந்நாட்டில் வாழும் பல ஆயிரக்கணக்கான பெரும்பான்மை சிங்கள மக்கள் இன்றும் தொழிலாளராகவும் உத்தியோகத்தர்களாகவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், வியாபார ஸ்தாபனங்களிலும் நாடு பூராகவும் வேலைவாய்ப்புப் பெற்று தங்களின் குடும்பங்களை அதன் மூலம் காப்பாற்றி கஸ்டமின்றி நிம்மதியாகவும் வாழ்ந்துவருவதாகவும் முஸ்லிம்களின் முன்மாதிரியை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டியும் வந்துள்ளார்.

இலங்கையில் பூர்வீகமாக பல நூற்றாண்டுகளாக வாழும் எல்லா இனத்தவர்களுக்கும் இந்நாடு சொந்தமானது என்பதனையும் அவர் அவ்வப்போது எடுத்துரைத்தும் வந்துள்ளார். இவ்வாறு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியமான பல அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி அச்சமுமின்றி அந்நியர்களுக்கு மத்தியில் எமது மக்கள் பற்றியும் நமது முஸ்லிம் சமூகம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவ்வப்போது எடுத்துரைத்து வந்தமை எங்களுக்கெல்லாம் மிகவும் ஆறுதலாக அமைந்திருந்தது. 

இவ்வாறான சிங்கள அரசியல்வாதிகள் இந்நாடாளுமன்றத்தில் இனியும் இருக்க வேண்டும். அன்னவர்களின் குரல்கள் சத்தியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் சரித்திர பூர்வமான பல பழைய வரலாற்றுச் சான்றுகளுடன் மீண்டும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தணையுமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -