தமிழ் மக்களின் ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்-சுமந்திரன்

பாறுக் ஷிஹான்-

2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை எங்களுடைய மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீரும் வரையில் நாங்கள் அதைச் செய்யப் போவதுமில்லை. அந்த அரசு ஊடாக எமது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை சாதிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற போது ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்:

ஓகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் மாவட்டம் மாவட்டமாக சந்தித்து வருகின்றோம் அதன்படி அம்பாற மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றோம்.

கொரோனா வைரஸ் அனர்த்த காலத்தில் வித்தியாசமான ஒரு முறையில் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றது. எமது வேட்பாளர்களுக்கு பல சுகாதார நிலைமைகள் குறித்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போர் வெற்றியோடு நாங்கள் மஹிந்த அரசுடன் என்ன விதமாக செயற்பட்டது என்பது மக்களுக்கு தெரியும் அந்தக் காலகட்டத்தில் கூட மஹிந்த அரசுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியமை பலருக்கு தெரிந்த விடயம். மஹிந்த தரப்பினரின் அடக்குமுறைகள் பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்ற வேளையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தோம்.

2015 ஆம் ஆண்டு புதிய அரசியலை நாங்கள் சேர்ந்து பயணித்தோம் ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை எங்களுடைய மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீரும் வரையில் நாங்கள் அதைச் செய்யப் போவதுமில்லை. அந்த அரசு ஊடாக எமது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை சாதிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.அந்த முயற்சிகள் பல கைகூடி இருந்தாலும் சில நிறைவேறவில்லை விசேடமாக அரசியல் தீர்வு பிரச்சினை புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தோம் அதன் ஒரு நகல் வரைவ கூட பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தும் கூட அது நிறைவேற்றப்படவில்லை.

ஆனாலும் கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்தல் உட்படபல கை கூடி வந்திருந்தும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை இந்த நிலையில் மறுபடியும் ராஜபட்ச குடும்பத்தினரிடம் ஆட்சி சென்றிருக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் மக்களிடம் சென்று எவ்வாறு வாக்கு கேட்க வேண்டும் எதைக் கூறி வாக்கு கேட்க வேண்டும் என்ன பல விடயங்களை எமது வேட்பாளரிடம் மனம் திறந்து பேசி இருக்கின்றோம். மக்களிடம் செல்லும் போது எமது பிரதான விடயம் அரசியல் தீர்வு என்பது அது சாதகமான அரசால் நமக்கு சாதகம் இலலாத அரசாங்கமானாலும் அதனை நாங்கள் முன்னெடுப்போம் அது எங்களுடைய இறைமை சம்பந்தமான விடயம் அதுவாகும் என்பதை மக்களிடம் குறிப்பிட வேண்டும்.

இன்றைய தினத்தில் அம்பாரை மாவட்ட கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்தல் விவகாரம் பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கம் விவகாரம் எல்லைகள் நிர்ணயம் செய்யும் விடயத்தில் உள்ள சவால்கள் முன்னாள் போராளிகள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சினை குறித்துப் பேசி இருந்தார்கள் இந்த விடயங்கள் அனைத்திற்கும் நாங்கள் செவிகொடுத்து இருக்கின்றோம்.

எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தல் அறிக்கைகளில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவோம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து விடையம் எதையும் செய்வோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தை பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் தன் இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நாம் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -