அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டியில் உள்ள டிரம்ப், பல்வேறு கட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் பிரசார வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில் சிவப்பு வண்ணத்தில் தலைகீழாக முக்கோணம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இது வெறுப்புணர்வை தூண்டும் நாசிகளின் குறியீடு என்பதால் அந்த வீடியோவை நீக்குவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்தது. அதேசமயம் இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு அல்ல என டிரம்பின் பிரசாரக் குழு விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார் எனவும் அதற்கு அவரது நிர்வாகத் திறன் இன்மையே காரணமெனவும் எதிர்க்கட்சியினர் பாரிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.