தலவாக்கலை பி.கேதீஸ்-
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித குடியிருப்பு திட்டங்களுக்கு பொறுப்பான முகவர் நிறுவனத்தின் கொவிட் 19 கொரோனா தொற்று நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலய ஊழியர்களுக்கும் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொது மக்களின் நலன் கருதி ஒரு தொகை கைகள் கழுவும் திரவியங்களும் முக கவசங்களும் மற்றும் நோய் தடுப்பு உபகரணங்களும் நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ.ஆர். புஸ்பகுமாரிடம் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித குடியிருப்பு திட்டங்களுக்கு பொறுப்பான நிறுவனத்தின் நுவரெலியா கிளை பிரதி திட்ட முகாமையாளர் சுவையிர்.ஜே.காரியப்பர் கையளித்தார்.