அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதயில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (14) மதியம் இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்க தயாராக உள்ளோம்.
அதற்காக இந்த ஆதரவிற்காக பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கின்றோம். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்டுள்ளார். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.
மேலும் நாங்கள் இந்த அரசாங்கத்தை ஏற்படுத்திய போது ஆதரவு வழங்கவில்லை. ஆனால் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். அரசியல் தீர்வு எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் என்றார்.