ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்கள் கூறுவதை நிறுத்த வேண்டும்- துரைராசா ரவிகரன்

பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல, இலங்கை முழுவதும் பௌத்த பூமியாகும். வடகிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரரின் குறித்த கருத்துத் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு பௌத்தம் வருவதற்கு முன்னரே இலங்கை முழுவதும் சைவம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல இலங்கை முழுவதுமே தமிழர்களின் பூர்வீக இடமாகும்.

தமிழர்கள் வடக்கு, கிழக்கை மாத்திரமே தமது பூர்வீக இடமாக உரிமைகோருவதென்பது தமிழர்களின் பெருந்தன்மையாகும். இதனை உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மொழி இங்கு பிறப்பதற்கு முன்னரே தமிழ்மொழி பிறந்துவிட்டது. பன்நெடுங் காலமாக தமிழ் மொழி பேசப்பட்டும் வந்திருக்கின்றது.

சிங்களவர்கள் இங்கு ஒரு இனமாக கட்டமைப்பதற்கு முன்னரே, ஏன்? சிங்களவர்களின் மூதாதையர்கள் இந்த தீவிற்கு வருவதற்கு முன்னரே, இங்கு தமிழர்கள் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றாரகள் என்பது வரலாற்று ரீதியாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர் தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை

அத்துடன் சரியான வரலாற்று அறிவில்லாமல் கருத்துக்களை வெளிவிடுவதனை ஞானசாரதேரர் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறு நிறுத்திக்கொள்வது நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -