புசல்லாவில் கானாமல் போன சிறுவன் மீட்கப் பட்டு பெற்றொரிடம் கையளிப்பு


எம்.ஏ.முகமட்-

புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த எம். உமர்டீன் (வயது 10) என்ற சிறுவன் நேற்று (31) காலை 9.00 மணி முதல் காணாமல் போய் உள்ளமை தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைபாடு செய்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்த சிறுவன் இரட்டைபாதை நீவ்பிகொக் தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கபெற்று பின் சிறுவனை பொலிஸ் விசாரணைகள் ஊடாக இன்று (01) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுவன் வீட்டுக்கு அழைத்து செல்லபட்டுள்ளான்.

குறித்த சிறுவன் கண்டி நுவரெலியா பிரதான வீதியில் இருப்பதை கண்டு நீவ்பிகொக் தோட்டத்தை சேர்ந்த நல்லுள்ளம் படைத்த ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பெற்றோர்கள் தொடர்பிலான விடயங்களை சிறுவனிடம் கேட்ட பொழுது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதால் சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது இந்த சிறுவன் தனது ஊர் பொகவந்தலாவ என்றும் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் சிறுவனை பாதுகாத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க எடுத்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -