அம்பாரை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வமத விசேட சமய வழிபாடுகள்


எம்.எம்.ஜபீர்-
ம்பாரை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டெழும் எம்தேசத்தின் இளைஞர்கள் மற்றும் முழுநாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி பிரார்த்திக்கும் "அமாவாசையில் ஒளி மழை" சர்வமத விசேட சமய வழிபாடுகள் நேற்று இரவு (20) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டெழும் எம்தேசத்தின் இளைஞர்கள் மற்றும் முழுநாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டிய இந்து சமய மாவட்ட பிரதான நிகழ்வு நாவிதன்வெளி அன்புவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது இளைஞர், யுவதிகள், பொது மக்கள் கையில் தீபமேந்தி ஒளியேற்றிய ஒளி விளக்கு பூஜயும், விசேட வழிபாடும் ஆலயத்தில் இடம்பெற்றது. இதனை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரி.தேவகுமார் குருக்கள் நடாத்தி வைத்தார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும், முழு நாடும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டியும் விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற வழிபாடு நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டீ.எம்.சிசிரகுமார, அம்பாரை மாவட்ட உதவி பணிப்பாளர் டபிள்யூ.ஏ.ஜீ.எஸ்.தமயந்தி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாறக், நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ரூகுதரன், வலம்புரி இளைஞர் கழகத்தின் தலைவர் சிவஸ்ரீ சுபாஷகர் சர்மா குருக்கள் உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -