கொவிட்-19 காலத்தில் தேசிய இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் வகையில் இலங்கையில் உள்ள ரம்யா லங்கா நிறுவனம் இரத்ததான நிகழ்வு ஒன்றை இன்று கொழும்பு-10இல் உள்ள தாருல் ஈமான் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி தலைமையில் நடாத்தியது.
நாரேகேன் பிட்டியில் உள்ள தேசிய இரத்த வங்கியின் வைத்தியர் நயானா தாரா உள்ளிட்ட தாதியர் குழுவினரும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
ரம்யா லங்கா நிறுவனம் இதுவரை நூற்றிற்கும் மேற்பட்ட இரத்தான முகாம்களை நடாத்தி இலங்கையின் இரத்த வங்கிக்கு பெருமளவான இரத்தங்களை நன்கொடையாக வழங்ககி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.