அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சி மட்டக்களப்பில் வெற்றி பெறாது.-சட்டத்தரணி ஹபீப்றிபான்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள்அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாபோட்டியிடும் கட்சியோ வெற்றி பெற முடியாது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப்றிபான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தன்னைஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றகூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-


எமது கல்குடாப் பிரதேசத்திலுள்ளஇளைஞர்களுக்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இளவயதில் செய்கின்றதைரியம் தான் எங்களை முன்னோக்கும். அந்த வகையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைகல்குடாவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக நீங்கள் போராட வேண்டிய நிலையில்உள்ளீர்கள்.
எங்கள் மண் காப்பாற்றப்பட வேண்டும்.எங்களது மண்ணுக்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும். அந்த தலைமைத்துவம்உண்மையான, நேர்மையான, ஊழலற்ற, பண்பான நல்லதொரு தலைமைத்துவமாக இருக்கவேண்டும். அந்த தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக உள்ளேன். இதற்கு நீங்கள் தயாரா என்றுகேட்டு என் பின்னால் ஒன்றிணைய வேண்டும்.
அரசியலில் பல துடிப்புக்கள் மாறுவதற்குஇந்த இளைஞர் சக்தி என்பது ஒரு முக்கியமான சக்தியாக உள்ளது. அந்த சக்திதான் நீங்கள்கல்குடாவில் எடுக்கின்ற சக்தி. ஒருவரை வெல்ல வைக்கவும், தோற்க வைக்கவும்இளைஞர்களால் முடியும். நாம் அனைவரும் எமது மண் மீது நம்பிக்கை கொண்டு எமது மண்ணை பாதுகாக்கவேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர்ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சியோ வெற்றிபெற முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருமுஸ்லிம் பிரதிநிதித்துவம் வருகின்றது என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்துமாத்திரமே வர வேண்டும் என்றார்.
ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்றஉறுப்பினர் எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்றுவாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்உறுப்பினர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -