அரசியல் மரபுகளுக்கு சவால் விடுக்கும் சுலோகத்துடன் தேர்தலில் குதித்துள்ள ஜினசிறி தடல்லகே!

லங்கையின் அரசியல் மரபுகளுக்கு சாவால் விடுக்கும் சுலோகத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் ஜினசிறி தடல்லகே. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ள அவர் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியாகும்.

அரச நிர்வாக சேவையில் மிகுந்த வினைத்திறனுடன் செயற்பட்ட அவர் இறுதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக சேவைகள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேர்த்தியான அரச நிர்வாக சேவையினூடாகவே நாட்டின் சட்டம் ஒழுங்கை காக்கமுடியும் என உறுதியாக நம்பும் அவர் தனது சேவைக்காலத்தில் மக்களுடன் அதிகாரிகள் சினேகிதபூர்வமாகவும் அவர்களின் மனக்கவலைகளை தீர்க்கும் விதத்திலும் செயற்படவேண்டும் என அறிவுறுத்தியவராகும்.

ஓய்வு பெற்றபின்னர் தனது சேவைக்காலத்தில் சந்தித்த சவால்களையும் அனுபவங்களையும் புத்தகமாக எழுதியுள்ளார். 'ஏவா பே மச்சான் மெகே' 'அதுகள் இங்கே இயலாது மச்சான்' என்ற புத்தகத்தில் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்களை புலமைப்பரிசில்கள் கொடுத்து வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக அனுப்பியபோது , அவர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அரச நிர்வாக சேவையை சீர்திருத்த ஒத்துழைக்கவில்லை என்றும் கடும்விமர்சனங்களை தனது புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

'அரசியல் மரபுகளுக்கான ஒரு சவால்' என்ற சுலோகத்துடன் தேர்தலில் குதித்துள்ள திரு டலலகே, இலங்கை அரசியல் மரபில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி சிறந்த நிர்வாக சேவையை உருவாக்குவதன் மூலம் நாட்டினை மேன்மை பெறச்செய்யமுடியும் என தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -