நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட மீன்பிடி சமாசங்களின் சம்மேளன தலைவர் ஏ.ஏ.றஹீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் சாய்ந்தமருது மத்திய கிராமிய கடற்தொழில் அமைப்பின் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இப்பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் மீனவர் வீடமைப்பு திட்டம், ஐஸ் தொழிற்சாலை, மீன் களஞ்சியசாலை, படகுத்துறை, மீனவர் தொலைத்தொடர்பு நிலையம், மீன்பிடியின்போது படகுகள் காணாமல் போகுமிடத்து அதனை மீட்டெடுத்தல் போன்ற விடயங்கள் மீனவர்களால் முன்வைக்கப்பட்டு அது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து உரிய தீர்வுகளை பெற நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களால் மீனவர்களுக்கு கூறப்பட்டது. அது மட்டுமல்லாது இவற்றில் சில விடயங்கள் குறித்து மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் தான் முன்னரே பேசிய விடயத்தையும் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் இங்கு மீனவர்களுக்கு அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.