வங்கக்கடல் - அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மீனவர்களுக்கு எச்சரிக்கை


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் வீசுகின்றது.

இதனால் மீனவர்கள் இன்றும், நாளை தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,காரைக்கால்,சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8-ம் திகதி மத்திய மேற்குவங்க்கடலில் கிழக்கு பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -