சுஆத் அப்துல்லாஹ்-
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள 24 பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் கோறளைப்பற்று தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பரமானந்தராஜா அவர்களின் தலைமையில் கிரான் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ. இன்பராஜாவின் நெறிப்படுத்தலில், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வலயகல்வி பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில், எதிர்வருகின்ற தினங்களில் பாடசாலை ஆரம்பிக்க கொவிட் 19 யில் இருந்து பாதுகாப்பு பெற பாடசாலை அதிபர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
1) பாடசாலைகள் 4 கட்டங்களில் திறக்கப்பட இருப்பதால் முதல் கட்டத்திலே பாடசாலை முழுமையாக தொற்றுநீக்கப்படவேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
2) மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை நுழைவாயிலேயே இரு கைகளையும் தொற்று நீக்கிகளை கொண்டு கழுவுதல்.
3) மாணவர், ஆசிரியர்கள் முகக்கவசம் அனிந்து வருதல் அவசியம்.
4) வகுப்பரையில் மாணவர்களுக்கிடையிலான இடைவெளி 1 m பேணப்படல் வேண்டும்.
5) 1 ஆம் கட்டம் நிறைவடைய முதல் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் COVID-19 யிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பாடசாலை என சான்றிதல் பெறல் வேண்டும்.
6) பாடசாலையிற்கு புதிதாக வருகைதருபவர்கள் தொடர்பான தகவல்களை கோவைப்படுத்தல்.
7) COVID-19 தொடர்பான அரிவுருத்தல் முறையாக கோவையினை பேனுதல்.
8) இருமல் தும்மல் சுவாசச்சிரமம் காய்ச்சல் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களை பாடசாலை வருகைதர அனுமதிவழங்காதிருத்தல்..
9) மேலதிக சுகாதார ஆலோசனைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்களை அனுகி பெற்றுக்கொள்ளல்.
10) மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறை களைகளை பின்பற்ற தவறும் பச்சத்தில் சுகாதார பரிசோதகர்களால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் போன்ற முடிவுகள் எட்டப்பட்டன.