அமெரிக்க தூதரக அதிகாரி என்பதற்காக பாரிசோதனை இல்லாமல் வரமுடியாது...

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

டுமையான கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா காணப்படுவதுடன் சுமார் 1 இலட்சத்தி 10ஆயிரம் பேர் இதுவரை மரணமாகியுள்ளனர். இந்த வகையில் கொரோனா நோயின் அபாயகரமான நாடாக அமெரிக்கா இருக்கும் இத்தருணத்தில் அங்கிருந்து நேற்று இலங்கை வந்த அமெரிக்க தூதரக அதிகாரி சர்வதேச மற்றும் இலங்கையின் சுகாதார சட்ட நடைமுறைகளை பின்பற்றாது சுகாதார அதிகாரிகளின் பரிசோதனைகளை புறக்கணித்து இலங்கைக்குள் வந்துள்ளமை இலங்கை வாழ் மக்களுக்கு பாரியதொரு அபாயகரமான விடயமாகும்.

ஏனைய நாடுகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படும்போது அவர்களுக்கு விமான நிலையத்தில் முறையான பரிசோதனைகள் வழங்கப்பட்டு 14 நாட்கள் அல்லது 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரியின் நடவடிக்கை இலங்கை வாழ் மக்களிடத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவர் மூலம் சில வேளைகளில் பாரிய கொரோனா தொற்று ஏற்படலாம். காரணம் அமெரிக்கா கொரோனா தாக்கத்தில் பாரிய பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. இத்தருணத்தில் அந்த நாட்டுப் பிரஜையின் வருகை நிச்சயம் இலங்கையின் ஆபத்துக்கான ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. உண்மையில் அவர் மனித நேயம் உள்ளவர் என்றால் அவர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அந்த பி.சி.ஆர் பரிசோதணைக்கு உட்பட்டிருக்கலாம் அல்லவா? நிச்சயம் குறித்த நபர் உடநடியாக பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். 

சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் குறித் நபர் கொரோனா தொற்று இல்லாத நாட்டில் இருந்து வந்திருந்தால் பறவாயில்லை என்று ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர் வந்ததே பாரிய நோய்த் தொற்றுள்ள நாடு என்பதால் இது விடயத்தில் அரசு பாராதீனமாக இருக்க முடியாது என்பதே புத்தி ஜீவிகளின் நிலைப்பாடு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -