ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியமானது(IWARE) மட்டக்களப்பிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களினது அனுபவத்தினை புரிந்துகொண்டு அவர்களது வினைத்திரனுடனான பங்களிப்பிற்கும் ஆற்றலைக்கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிப்பதற்குமாக உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பெண் அங்கத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் வகிக்கின்ற பெண் உறுப்பினர்களை மையப்படுத்தி மேற்கொண்ட “மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் ஆய்வறிக்கை இன்று(13) வெளியிட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று(13) காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் அவ்வமைப்பின் பணிப்பாளர் திருமதி அனீஷா பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது குறித்த ஆய்வு அக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த ஆய்வறிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பெண் அங்கத்தவர்களின் விபரங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பும் பணிகளும்,பெண்களின் அரசியல் அறிவும் ஆர்வமும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பெண்களுக்கான ஆதரவும் சவால்களும் இவற்றுக்கான சிபாரிசுகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.